Sunday, February 3, 2008

நடிகனுக்குத் தேவை சமூக அங்கீகாரம்


ஒரு நடிகனுக்குத் தேவை சமூக அங்கீகாரம்....எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்,தன்னை அடையாளம் கண்டு கொண்டு,ரசிகர்கள் அவனை அணுகி பாராட்டு தெரிவித்து,ஆட்டோகிராப் வாங்கி,கைகுலுக்கி....இப்படி பலவிதத்தில் அவர்களை அங்கீகரிக்கும் போது அவர்களுக்குள் ஏற்படும் ரசாயன மாற்றங்களிள், உள்ளம் பூரித்து,அகமகிழ்ந்து பிறவிப் பயன் அடைவார்கள்,இதற்கு நேர்மாறாக நடந்தால்...அவன் அடையும்பாடு எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள்...அப்படி நடந்த சம்பவம் ஒன்று சொல்கிறேன்,

என்னோட தகப்பனார் சென்னை விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு ஏர் இண்டியா விமானத்தில வந்த நேரம்,இவரோட பக்கத்து சீட்டுல தலைவாசல் விஜய் இருந்திருக்கிறார்,என்னோட தகப்பனார் அதிகம் சினிமா படம் பாக்கிற வழக்கம் இல்லாததால,இவரு பாட்டு இவரோட வேலையை பார்த்து கொண்டு,விமான பணிப்பெண் கொடுத்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்....

தலைவாசல் விஜய்க்கு அதுக்கு மேல பொறுக்கல,ஆரம்பிச்சார்...."சார் நான் யாருன்னு தெரியுமா"??
இவரு மேலயும் கீழயும் பார்த்துட்டு, "தெரியல"ன்னு சொல்லிட்டார்.

"சத்தியமா தெரியல"???

தெரியல...

சார் நான் தான் "தலைவாசல் விஜய்",தலைவாசல் படத்தில அறிமுகமாகி அதுக்கப்புறம் நிறைய படம் நடிச்சுருக்கேன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டார்,
என்னடா இது வம்பா போச்சுன்னு, நான் அதிகம் படம் பாக்கிறதில்ல,மன்னிச்சுக்கோங்கோன்னு சொல்லிட்டு அதுக்கப்புறம் மலேசியா வந்து இறங்குற வரை நிறைய சினிமா விசயம் பேசிட்டு வந்தாங்களாம்....
பாத்துங்கப்பா,இனிமே யாரும் நடிகர்களை பார்த்துட்டா குறஞ்சபச்சம் ஒரு வணக்கம் ஆவது சொல்லிடுங்கோ....என்னது "எங்களுக்கு எல்லாம் நடிகைகளை தான் கண்ணுக்கு தெரியும்ன்னு" சொல்றீங்கள்ளா....உங்கள எல்லாம் திருத்தவே முடியாது...ஹம்ம்....

4 comments:

Shravan said...

hmmm.. sethapoo.. vithiyaasamaana concept... unmaithaan... naalu per paakra maathiri irunthuttu then yaarume kandukalanaa... manasukulla puzhukkam vanthrum.. athunaalethaane.. intha cine actress after marriage summa irukka mudiyaama again field-ku varraanga.. avanga again varrathu for that half fame and half money thaan...

malaysiangroup said...

aamada camera velichathile irunthutu,thidirnnu irutukulla poita maathri feeling irukum,athukku thaan avanghal thirumba field kku varathu,aadina kaalum,paadina vaayum oyaathunnu summavaa solli vechangal....lol

பாச மலர் / Paasa Malar said...

அங்கீகாரத் தேவைகள்தான்...

malaysiangroup said...

Nandri paasa malar,ungaladuya vimarsanathukku