
இன்னைக்கு கனடா தமிழ் வானொலி கலசம் இணையதளத்தில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தேன்,அதில் "மயக்கம் எனது தாயகம்,மவுனம் எனது தாய்மொழி,கலக்கம் எனது காவியம்"....... என்ற பாடல் வரிகளை கேட்டதும்,எனது நினைவலைகள் 1980க்கு போய்ட்டது,அப்போ நாங்க இருந்த வீட்டுக்கு எதிரா ஒரு புரட்டா கடை புதுசா வந்துச்சு,அவங்கள் இராத்திரி ஆனதும் புரட்டா,அசைவ வகைகள் விற்க ஆரம்பிச்சுடுவாங்கள்,விற்பனை ஆரம்பித்தற்கு அறிகுறியா ரெக்கார்ட் பாட்டு போட ஆரம்பிச்சுடுவாங்க...சில வகை பாட்டுதான் வெச்சிருப்பாங்க,அதனால போட்ட பாட்டையே தினமும் போட்டு அரச்ச மாவையே அரைப்பாங்கள்....அதில வர்ற ஒரு பாட்டு தான் மேற்படி பாட்டு,நான் அவங்ககிட்ட எப்படியோ பழகி ஆர்வக்கோளாருல தினமும் நான் தான் ரெக்கார்ட் பாட்டு போடுவேன்.இரவு 9.00 மணிவரை இப்படி தொடரும்....
எங்க வீட்டு மேல்மாடியில் ஒரு குஜராத்தி குடியிருந்தான்....இவனுக்கும் அந்த புரட்டாகடைக்கும் சரியான பொருத்தமாக இருக்கும்,புரட்டாகடை நடுநிசியில் கஸ்டமர் கேக்குற கொத்து புரட்டா போட்டுக் கொடுப்பாங்கள்,அப்போதான் 'ஏழரை' ஆரம்பிக்கும்,இவன் கல்லில் புரட்டாவை இரும்புக் கரண்டியால் கொத்தி எடுப்பான்,கன...கன..கன....கன..ன்னு ,குஜராத்திக்கு தூக்கம் கெட்டு காட்டுக்கத்து கத்த ஆரம்பிப்பான்,அப்போ அவன் பேசுற தமிழ் கேக்க சிரிப்பா இருக்கும்.அதுக்காக அவ்ங்கள் நிறுத்தவா முடியும் .இது ஒருபுறம் இருக்க,என்னோட அம்மத்தா புரட்டாக்கடைக்காரங்கள்கு டார்ச்சர் கொடுக்க ஆரம்பிச்சாங்கள்,எப்படின்னு கேக்குறீங்களா,2 புரட்டா கட்டச்சொல்லுவாங்கள்,சால்னாக்கு ஒரு தூக்கு கொடுத்து தூக்கு நிறைய கொடுன்னு அதட்டல் போடுவாங்க,அவனுங்க எதிர்வீட்டு ஆச்சி ஆச்சேன்னு கொடுத்துவாங்க,2 புரட்ட்டா வெச்சுகிட்டு,பத்தாக்குறைக்கு எங்கள்க்கு தோசையொ,இட்லியோ சுட்டுக் கொடுத்து,அதுக்கு தொட்டுக்க சால்னா,எப்படி டெக்னிக்... ஒருநாள்,இரண்டுநாள்....பரவாயில்லை,அடிக்கடி இப்படி கேட்டா???? இதில என்ன வேற அனுப்பி வாங்கி வரச்சொல்லுவாங்கள்,நான் வெட்கப்பட்டுகிட்டே அவ்ங்ககிட்ட கேப்பேன்,கொஞ்சநாள்ள புரட்டா வாங்கி வரச்சொன்னா நான் ஓடி ஒளிஞ்சுடுவேன்...கடைசில அந்த புரட்டாகடைக்காரன் நொடிச்சு போயி கடையை சாத்திட்டான்,
ஹே....நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு புரியுது,என் அம்மத்தா தூக்கு தூக்கா வாங்கின "சால்னானால" தான் நொடிச்சு போயி மூடி ஓடிட்டாங்கன்னு,ஹீ..ஹீ...அவங்க்ள்க்கு வியாபாரம் சூடு பிடிக்காததால தான் மூடிட்டாங்க.... அட உண்மைய சொன்னா நம்புங்கப்பா.
Saturday, February 2, 2008
திரும்பிப் பார்க்கிறேன்......(2)
Posted by
malaysiangroup
at
Saturday, February 02, 2008
Labels: Evening Mutton Stall
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Hmmm.. sethappooo... appdi evening stalls niraya bachelorsku help pannuthu... not only family. Naa veetula cook pannuna kaalangalile niraya time rice mattum pannitu anga curry... kulambu mattum vaangi saapdrukkaen.. hehe. Ippolaam anga saapdrathu illa.. vasathi konjam koodunaa athulaam maranthruthu... restaurant poi saapda soluthu.. but appdi road side shops paakkum pothu palaya naabagam varathaan seyyuthu... ( munthaa naethu naanum moochiyum side shopla SIDE DISH vaangi veetula vanthu MAIN DISH kooda saaptombaaa.. hehehehe )
hahaha....tamilan rathathila oorina visayam daa,thiruntha maatighal
Post a Comment