
முதல் தமிழ் போஸ்டிங் முடிஞ்ச கையோட வீட்டுக்கு அவசர அவசரமா கிளம்பி,மனைவி பிள்ளைகளை கூட்டிக்கொண்டு ஒரு நிச்சயதார்ததிற்கு போனேன்.பிற்பகல் 6.30-8.30 என்று அழைப்பிதழ் பாறைசாற்றியது,நானோ கிளம்பியது 7.10க்கு.
ஒருவழியாக இடத்தை கண்டுபிடித்து கோவில் மண்டபத்தை அடைந்து,உள்ளே நுழைந்து பார்த்தால்,இங்கும் அங்குமா விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு சொந்தங்களின் பதிவு.நாங்கள் எங்கள் இருக்கையை அடைந்து,மணமக்கள் மேடையை வேடிக்கை பார்க்க துவங்கினோம்.மணி தான் நகர்ந்தது,ஆனால் விழா தொடங்கியபாடில்லை.என் மகன்கள் என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள் பசி...பசி என்று.
ஒரு வழியாக விழா ஆரம்பித்தது மணமகன் அறிமுகத்தோடு, நானும் மகன்களை தேற்றி , மேடையை நோக்கி ஏக்கோத்தோடு பார்க்க ஆர்ம்பித்தேன் எத்தனை மணிக்கு முடிக்க போகிறார்கள் என்று.மணமக்கள் பெற்றோர் சம்பிரதாயங்கள் முடிந்தது,அதற்குள் கூட்டத்தில் சலசலப்பு,இன்னும் யாரும் உணவு உண்ணச் செல்ல சைகை காட்டமாட்டேன்கிறார்களே என்று,
கடைசியாக மணமகள் அறிமுகம்...மணி 9.15.,கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக,அனுமதியை எதிர்பார்க்காமல் விருந்து அறையை நோக்கி செல்ல ஆரம்பித்ததை பார்த்து,எங்களுக்குள் தைரியம் வந்தது.நாங்களும் அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.(சபை அநாகரிகம்-1)
எல்லோரும் வரிசையில் நின்று அவரவர் வேண்டுகின்ற எடுத்துக்கொண்டு கைக்கும் வாய்க்கும் வேலை கொடுக்க,மொத்த கூட்டமும் அறைக்கு வந்து சேர்ந்தது.
கூட்டத்தில் ஒருத்தர் ஆரம்பித்தார்,"எல்லா நல்லா இருக்கு,ஆனா ஐஸ்கிரீம் இருந்தா நல்லா இருந்திருக்கும்"....காட்டரிங் ஆட்கள் அனுபவம் உள்ளவர்கள் போலும்,எல்லா உணவும் முடியும் தறுவாயில்,ஐஸ்கிரீம் டப்பிகள் வெளியே வந்தன...இங்கு தான் அநாகரிகம் முற்றியது,அவரவர் போட்டி போட்டுக்கொண்டு கைகொள்ளும் அளவுக்கு அள்ள ஆரம்பித்தார்கள்,சாப்பிட்டது போக இன்னும் அள்ளிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு சென்றார்கள்,(ஆசை வெட்கம் அறியாது என்ற பழமொழி தான் நினைவுக்கு வந்தது)பார்க்க பார்க்க வெறுப்பு தான் மிதமிஞ்சியது,படித்தவனுக்கும் பாமரனுக்கும் வித்தியாசமே இல்லை.
இப்படியான சமூகம் எப்படி திருந்தப் போகிறது ????...
Saturday, September 1, 2007
சபை நாகரிகம்.
Posted by
malaysiangroup
at
Saturday, September 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Intha example ice cream kalachaaram padi padiyaa naama life-la pantra daily activities moolamaathaan valaruthu.. like bus-la idichi pidichi idam pidikrathu.. also same in train.. kalyaana veetula ithu critical.. we cant control anyone or the catering people.. bcoz.. maaple ponnoda relatives wud try to show their rights on this place... silly... but ingayum atha kaatta virumbuvaanga... unmaithaan.
Kadasi vara nee ethana kai ice cream appdiye alli saaptenu sollave illa paaththiyaa sethappoo... angathaandaa nee nikkire... heheheeehehhehee.
seri un aasaya ean kedupaanen,oru 12 icecream allitu vanten daa......lol
Post a Comment