
அப்பாடா,கடசியா தமிழ்ல ஒரு போஸ்டிங் போட போரேன்,நெனச்சாலே மனசு குளிருதுப்பா....
1ம் வகுப்போ,2ம் வகுப்போ, எந்த கிளாஸ்ன்னு மறந்து போச்சு,ஆனா அவன் பேரு மட்டும் நினைவு இருக்கு...பின்னே அவன் என்ன எமாத்தின விதம் அப்படி,பேரு ஹரி.. கிளாஸ் பாட்டு ஓடிட்டு இருக்கு,அவனும் நானும் டீச்சர் சொல்லிக் கொடுக்கிறத கவனமா கேக்குற மாதிரி பாவ்லா பண்ணிக்கிட்டு,எங்ங காரியத்தில குறியா இருந்தோம்.
அவன் கையில ஒரு 3 இன்சு பிளாஸ்டிக் டியூப் எடுத்துகிட்டு சரடு விட ஆரம்பிச்சான்,இந்த டியூப்போட ஒரு பக்கம் தொறந்தா சுடு தண்ணியும்,மறுபக்கம் தொறந்தா பச்சதண்ணியும் வரும்,அத்துக்கு என்கிட்ட ஒரு மெசின் இருக்குன்னான்.எனக்கு ஆச்சரியம் தாங்கல,அப்புறம் ஒரு பக்கம் சுடு தண்ணி,இன்னொரு பக்கம் பச்ச தண்ணினா சும்மவா,அவன்கிட்ட டீலிங்-க்கு இறங்கிட்டேன்.
"டேய்,எனக்கு இதக் கொடுடா,நா உன்க்கு வேற ஒன்னு தாரேன்",நா அவன் மண்டய கழுவ ஆரம்பிச்சேன்,அவன் ரொம்ப பிகு பண்ண ஆரம்பிச்சான்,பின்ன அவன ஒரு வழியா ஒத்துக்க வெச்சுட்டேன்.ஸ்கூல் ஹவர் முடிஞ்சதும் தர்றேன்னு ஒதுக்கிட்டான்,எனக்கு டீலிங் வெற்றி ஆனதுல அதுக்கப்புறம் கிளாஸ்ல மன்சு ஒட்டல....இருப்பு கொள்ளல, எப்போடா ஸ்கூல் முடியும்னு இருந்தேன்.
ஸ்கூல் முடிஞ்சதுக்கு அறிகுறியா பெல் அடிச்சது,நா அவன பாக்கிறேன்,அவன் பாட்டு பேக்க எடுத்துக்கிட்டு தறிகெட்டு ஓட ஆரம்பிச்சான்,நானும் அவன்கிட்ட எப்படியும் அந்த 8வது உலக அதிசயத்த வாங்க்கிடனும்னு அவன பிடிக்க ஓடினேன்,ஸ்கூல் கேட் கிட்ட நெருங்கிட்டேன் அவன பிடிக்க,சடார்னு என் சட்டை காலர பிடுச்சு நிப்பாட்டினார் கேட் வாச்சுமேன்,அவன் தப்பிச்சு ஓடிட்டான்.எனக்கு ஒரே ஏமாற்றம்.
இப்போக்கூட ஹோட்டல்ல தங்குறப்போ,பாத்ரூம்ல குளிக்க ஷவர் கைப்பிடிய திருகும் போது,அவன் நினப்பு தான் வருது,மனசுக்குள சிரிச்சுக்குவேன்.
இப்போ நீங்க சொல்லுங்க,நா ஒரு கூமுட்டைன்னு நினச்சுகிட்டீங்களா,இல்ல உங்களுக்கும் இதுபோல ஒரு கதை இருக்குன்னு நினச்சுகிட்டீங்களா,அட சும்மா சொல்லுங்கண்ணே !!!!!
Saturday, September 1, 2007
திரும்பிப் பார்க்கிறேன்......
Posted by
malaysiangroup
at
Saturday, September 01, 2007
Labels: பசுமரத்தாணி
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
mg, wats ur blog abt? lol, i can read tamil, but extremely slow, lol. how...
wow...u can read tamil huh......wonderful,no lah its all abut my nostalgia.....school days,whn i was in 1st standerd my class mate lied to me tht his 3" plastic tube with a help of a machine can give both hot water n cold water.
bhahahhahahahha, u cried while typing isn't it? lol
Post a Comment